கூண்டு போல் மூடப்பட்ட லாரியில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லத் தடை
வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர்களைக் கூண்டு போல் அடைக்கப்பட்ட லாரியில் ஏற்றிச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் தடை நடப்புக்கு வரும்.
போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) அதனை இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சின் செலவினம் தொடர்பான விவாதத்தில் அவர் பேசினார்.
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் 50,000 லாரிகளில் 1,000 லாரிகள் வரை கூண்டு போல் அடைக்கப்பட்டவை.
அந்த லாரிகள் வெளிப்புறமாகப் பூட்டப்பட்டால் விபத்தின்போது ஊழியர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொள்ளலாம்.
சில நிறுவனங்கள் கூண்டு போல் அடைக்கப்பட்ட லாரிகளைப் பயன்படுத்த விரும்பலாம்.
அந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் லாரியை மாற்றியமைக்கவேண்டும்.
ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து நீண்ட நெடிய விவாதத்திற்குப் பிறகு தடை நடைமுறைக்கு வருகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi