Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தற்போதுள்ள சைக்கிளோட்டப் பாதைகளின் நீளம் 500 கிலோமீட்டர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தற்போதுள்ள சைக்கிளோட்டப் பாதைகளின் நீளம் 500 கிலோமீட்டர் என்றும் அது இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் 800 கிலோமீட்டருக்கு அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியிருக்கிறார். 

சிங்கப்பூரில் கழக வீடுகள் கொண்ட பேட்டைகளில், சைக்கிளோட்டப் பாதைகளுக்கான கட்டமைப்பு எந்த நிலையில் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் (Ang Wei Neng) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். 

சைக்கிளோட்டப் பாதைகளுக்கான கட்டமைப்பு விரிவுபடுத்தப்படுவதால்  சிங்கப்பூரர்கள் பலர் நன்மை அடைகின்றனர் என்றார் அமைச்சர். 

2030ஆம் ஆண்டுகள் தீவு முழுவதும், அந்தக் கட்டமைப்பின் நீளத்தை 1,300 கிலோமீட்டருக்கு அதிகரிப்பது அரசாங்கத்தின் இலக்கு. 

புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், தோ பாயோ, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் சைக்கிளோட்டப் பாதைகளுக்கான பணிகள் நடந்துவருகின்றன. 

மேலும் சில இடங்களில் கட்டமைப்பை விரிவுபடுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் ஏலக்குத்தகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

--செய்தி

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்