Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடுமையான புற்றுநோய் சிலவற்றை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகக் கடுமையான புற்றுநோய் வகைகள் சிலவற்றை முன்கூட்டியே கண்டறிய உதவும் பரிசோதனையை உருவாக்கி வருகிறது.

உயிர்த்தொழில்நுட்ப நிறுவனமான MiRXES அந்தத் திட்டத்திற்கு அடுத்த மூவாண்டில் 50 மில்லியன் வெள்ளிக்குமேல் செலவிடவிருக்கிறது.

அதில் 7 சுகாதாரப் பராமரிப்பு, கல்வி நிலையங்களும் ஈடுபட்டுள்ளன. 

உருவாக்கப்படும் பரிசோதனையால், நுரையீரல், மார்பகம், கல்லீரல், வயிறு, ஆணுறுப்புச் சுரப்பி உள்ளிட்ட 9 வகைப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கமுடியும்.

சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். 

சிங்கப்பூர் மக்கள் புற்றுநோய்க்கு அதிகம் பரிசோதனை செய்துகொள்வதில்லை என்று அவர் கூறினார்.

முன்கூட்டியே நோயைக் கண்டுபிடித்தால் அனைத்து நோயாளிகளுடன் சிங்கப்பூரர்கள் அனைவரின் சுகாதார நிலையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார் அமைச்சர் ஓங். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்