Skip to main content
சிங்கப்பூரில் 22 குற்றங்களுக்குப் பிரம்படி நீக்கப்படலாம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 22 குற்றங்களுக்குப் பிரம்படி நீக்கப்படலாம்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 22 குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து பிரம்படி நீக்கப்படும் அல்லது கட்டாயமாக்கப்பட மாட்டாது என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 161 குற்றங்களுக்கான தண்டனையில் பிரம்படி உள்ளது.

அதில்...

65 குற்றங்களுக்கு - பிரம்படி கட்டாயம்

96 குற்றங்களுக்கு - பிரம்படி கட்டாயமில்லை

அந்தக் குற்றம் இன்னும் அக்கறைக்குரியதா;

அந்தக் குற்றத்தால் தீங்கு ஏற்பட்டதா;

குற்றத்தைத் தவிர்க்க அபராதம் அல்லது சிறைத்தண்டனை போதுமானதா;

இவற்றின் அடிப்படையில் பிரம்படிக்கான தேவை மறுஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சு சொன்னது.

ரயிலில் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் செயல்கள், விபச்சாரம் தொடர்பிலான குற்றங்கள் ஆகியவற்றுக்குப் பிரம்படி நீக்கப்படும்.

கும்பலாகக் கொள்ளையடிக்கும் முயற்சி, பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிப்பது ஆகிய குற்றங்களுக்குப் பிரம்படி கட்டாயமாக்கப்பட மாட்டாது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்