Skip to main content
குற்றவியல் சட்டத் திருத்த மசோதா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குற்றவியல் சட்டத் திருத்த மசோதா - மோசடிக்காரர்களுக்குப் பிரம்படி விதிக்கப் பரிந்துரை

வாசிப்புநேரம் -
குற்றவியல் சட்டத் திருத்த மசோதா - மோசடிக்காரர்களுக்குப் பிரம்படி விதிக்கப் பரிந்துரை

(படம்: envato.com)

சிங்கப்பூரில் மோசடிக்காரர்களுக்கும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போருக்கும் பிரம்படி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவில் அந்தப் பரிந்துரை இடம்பெற்றுள்ளது.

மோசடிகளுக்கு எதிரான போராட்டத்திற்குத் தொடர்ந்து தேசிய அளவில் முன்னுரிமை வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சு சொன்னது.

மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் மோசடிகளில் இழக்கப்படும் தொகையும் கவலையளிப்பதாக அது கூறியது.

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள்:

மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பலில் இருப்போர், மோசடிக் கும்பலுக்கு ஆள் சேர்ப்போர் - 6 முதல் 24 பிரம்படிகள் வரை

மோசடிப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவுவோர், SIM அட்டைகளும் Singpass தகவல்களும் வழங்குவோர் - 12 பிரம்படிகள் வரை

இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்.... 

'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்