புகைமூட்டம் - சன்னல்களை மூடி வைத்தால் போதுமா?
வாசிப்புநேரம் -
படம்: CNA/Lim Li Ting
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
புகைமூட்டம் மோசமடைந்தால் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி பரிந்துரைக்கப்படும்.
பலரும் வீட்டுச் சன்னல்களை மூடி வைப்பது வழக்கம்.
ஆனால் அது மட்டும் போதுமா?
சன்னல்களை மூடி வைத்தால் புகைமூட்டத்தால் பரவும் துகள்கள் வீட்டுக்குள் பரவுவதைக் குறைக்கலாம்.
ஆனால் சிறிய இடுக்குகள் வழி நுண்ணிய துகள்கள் அடைக்கப்பட்ட இடங்களைச் சென்றடையலாம்.
அதுமட்டுமல்ல.
சன்னல்களையும் கதவுகளையும் அடைத்து வைத்தால் காற்றோட்டம் தடைபடும்.
துகள்கள் படர அது வழியமைக்கும்.
வேறு என்ன செய்யலாம்?
காற்றைச் சுத்திகரிக்கும் சாதனத்தைப் (air purifier) பயன்படுத்தலாம்.
வெளியில் காற்றின் தரம் மேம்பட்டால் சன்னல்களையும் கதவுகளையும் மீண்டும் திறந்து வைக்கலாம்.
வீட்டுக்குள் புகைபிடிப்பது, மெழுகுவர்த்தி ஏற்றுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
வீட்டுக்குள் காற்றைத் தூய்மையாக வைத்திருக்க அது உதவும்.
தூசு தட்டிச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக ஈரத் துணிகளை வைத்துப் படிந்திருக்கும் துகள்களைத் துடைக்கலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi/CNA