Capri by Fraser ஹோட்டல் கொலை - சம்பவ இடத்தில் சந்தேக நபர்
வாசிப்புநேரம் -
ஹோட்டல் அறையில் மனைவியைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தோனேசிய ஆடவர் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை சுமார் 9.20 மணிக்கு 41 வயது சலேஹுடின் (Salehuddin) Capri by Fraser China Square ஹோட்டலைச் சென்றடைந்தார்.
அவர் சிவப்பு சட்டையும் கறுப்பு அரைக் கால்சட்டையும் அணிந்திருந்தார்.
அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன.
காவல்துறை அதிகாரிகள் அவரது மனைவி மாண்டுகிடந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின் அவர் காவல் வாகனத்திற்குத் திரும்பினார்.
இந்த ஆண்டு (2025) அக்டோபர் 24ஆம் தேதி சலேஹுடின், 38 வயதுத் திருவாட்டி நூர்டியா ரஹ்மா ரேரியைக் (Nurdia Rahmah Rery) கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர் அவரே காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.
வழக்கு விசாரணை சிங்கப்பூருக்குப் பதில் இந்தோனேசியாவில் நடைபெறலாமா என்று சலேஹுடின் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார்.
வழக்கு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் அது குறித்து முடிவெடுக்க முடியாது என்று நீதிபதி பதிலளித்தார்.
அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் சலேஹுடினுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA