Skip to main content
ஓட்டுநருக்கு ஓயாத இருமல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் trending

ஓட்டுநருக்கு ஓயாத இருமல் - விளக்குக் கம்பத்தில் மோதிய டாக்சி

வாசிப்புநேரம் -
ஓட்டுநருக்கு ஓயாத இருமல் - விளக்குக் கம்பத்தில் மோதிய டாக்சி

Xiaohongshu/CaiCaiXi

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் கிராப் (Grab) ஓட்டுநர் ஒருவர் ஓயாத இருமலால் அவதிப்பட்டதால் டாக்சி போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதியுள்ளது.

பயணிகளும் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினர்.

கடந்த திங்கட்கிழமை (16 மார்ச்) இரவு தஞ்சோங் ரூ (Tanjong Rhu) வட்டாரத்தில் விபத்து நேர்ந்தது. 

பயணி சம்பவத்தை இணையத்தில் விவரித்தார்.

அவரும் அவரது நண்பரும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.

ஓட்டுநருக்குத் திடீரென்று ஓயாமல் இருமல் வந்தது.

அவர் மூச்சுத் திணறி மெல்ல மயங்கியதைப் பயணிகள் உணர்ந்தனர்.

அவர்கள் ஓட்டுநரைத் தட்டி எழுப்ப முயன்றனர்.

அப்போது அவர் டாக்சியை வேகமாகச் செலுத்தியதும் முன்னால் இருந்த போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் வாகனம் மோதியது.

விபத்து ஏற்படுத்திய அதிர்வில் ஓட்டுநர் மீண்டும் தெளிவு பெற்றதாகத் தெரிகிறது.

அவர் பயணிகளிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டார்.

அந்தச் சம்பவம் கவலையளிப்பதாகக் கிராப் நிறுவனம் 8 World செய்தியிடம் தெரிவித்தது.

ஓட்டுநர் உடல்நலம் தேறிவருவதாய் நிறுவனம் குறிப்பிட்டது.

பயணிகளிடம் சம்பவத்தைப் பற்றிக் கேட்டறிந்து, அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தந்ததாக நிறுவனம் சொன்னது.

ஆதாரம் : Others/8World

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்