Skip to main content
பூன் கெங்கில் விளக்குக் கம்பம் மீது மோதிய கார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பூன் கெங்கில் விளக்குக் கம்பம் மீது மோதிய கார்- குடிபோதை காரணமா?

வாசிப்புநேரம் -
பூன் கெங்கில் விளக்குக் கம்பம் மீது மோதிய கார்- குடிபோதை காரணமா?

Facebook/SGRV FRONT MAN

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பூன் கெங் (Boon Keng) ரயில் நிலையத்துக்கு அருகே ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து விளக்குக் கம்பம் மீது கார் ஒன்று மோதியது. 

சம்பவத்தையடுத்து 71 வயது பாதசாரி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.

நேற்றிரவு (3 அக்டோபர்) சுமார் 9.10 மணிக்கு லவண்டர் ஸ்ட்ரீட்டுக்கும் (Lavender Street) சிராங்கூன் ரோட்டுக்கும் இடையிலான  சந்திப்பில் விபத்து ஏற்பட்டது.

சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் கருப்பு நிறக் கார் விளக்குக் கம்பம் மீது மோதியிருப்பதைக் காணமுடிகிறது.

காரின் முன்புறமும் விளக்குக் கம்பமும் சேதமடைந்துள்ளன.

சாலையில் கண்ணாடிச் சில்லுகள் சிதறிக் கிடக்கின்றன.

காரை ஓட்டிய 37 வயது ஆடவர் குடிபோதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.

விசாரணை தொடர்கிறது.

ஆதாரம் : Others/8World

மேலும் செய்திகள் கட்டுரைகள்