சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
கரிம வரி, நிறுவனங்கள் தொலைநோக்கோடு செயல்பட வழிவகுக்கும்: நிபுணர்கள்

படம்: AFP/John MACDOUGALL
சிங்கப்பூர் கரியமில வாயு வெளியேற்றத்தை இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் முற்றிலும் அகற்ற, அதன் கரிம வரியை கட்டங்கட்டமாக அதிகரிக்கவிருக்கிறது.
Glasgow பருவநிலை உடன்படிக்கையில் தனது இலக்குகளுக்கு ஈடாக அது அமைகிறது.
2030க்குள் ஒரு டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கான கரிம வரி 50 வெள்ளியில் இருந்து 80 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.
இது நிறுவனங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் சுற்றுப்புறம், எரிசக்தி போன்றவற்றில் கவனம் செலுத்தும் Fides Global நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர், முனைவர் N. வெங்கட்ராமன்.
இத்தகைய வரிகள் விதிப்பதால் அதை எப்படிச் செயல்படுத்தலாம், எப்படி வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்று நிறுவனங்கள் தொலைநோக்கோடு சிந்திக்கத் தொடங்கும். அது நல்ல பலனைத் தரும்.
ஒரு நீடித்த பசுமைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் சுற்றுச்சூழல் ஆர்வலர் கவிக்குமார்.
கரிம வாயு வரி அதிகரிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இதனால், பயனீட்டுக் கட்டணங்கள் சற்றே அதிகரிக்கலாம்.
என்றார் அவர்.