Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விற்பனையாளர்களையே ஏமாற்றும் மோசடி குறித்துக் காவல்துறை எச்சரிக்கை

வாசிப்புநேரம் -

Carousell இணைய விற்பனைத் தளத்தில் வாடிக்கையாளராக நடித்து நடத்தப்படும் மோசடிகள் குறித்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மார்ச் மாதம் முதல் குறைந்தது 69 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

குறைந்தது 47,000 வெள்ளி நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மோசடிக்காரர்கள் வாடிக்கையாளர்களைப் போல் நடித்து, பாதிக்கப்படுவோரின் இணையக் கடையிலிருந்து சிலவற்றைப் பெற்றுக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிப்பர்.

அவர்கள் தளத்தின் CarouPay எனும் கட்டண முறையின் மூலம் கட்டணத்தைச் செலுத்தவுள்ளதாக விற்பனயாளர்களிடம் கூறுவர். அதற்கான மின்னஞ்சலையும் அவர்கள் அனுப்புவர்.

மின்னஞ்சலில் கட்டணத்தைப் பெறுவதற்கான போலி இணையப்பக்க முகவரிக்கான இணைப்பும் இருக்கும்.

அதில் வங்கிக் கணக்குத் தகவல்களையும் OTP எனும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவு எண்ணையும் குறிப்பிட வேண்டியிருக்கும்.

வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியில்லாத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்படுவோர் உணர்வதாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்