Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சட்டவிரோதக் குழந்தைத் தத்தெடுப்பு சம்பவங்கள் உண்டா?

வாசிப்புநேரம் -
ஆள்கடத்தல் என்பது இருவகைப்படும்.

ஒன்று பாலியல் தொழிலுக்காகக் கடத்துதல்; மற்றொன்று தொழிலாளர் கடத்தல் என்று தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான
திரு கா சண்முகம் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் கடத்தல் என்று சந்தேகிக்கப்படும் 59 சம்பவங்களைக் காவல்துறை விசாரித்துள்ளது. அவை 18 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை உட்படுத்தியது என்று அமைச்சர் கூறினார்.

அவற்றில் 34 சம்பவங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 27 வழக்குகளுக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

எஞ்சிய 7 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

59இல் மீதமுள்ள 25 சம்பவங்கள் இன்னும் விசாரணையில் உள்ளன அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது; சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சில சம்பவங்களில் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளை உட்படுத்திய தொழிலாளர் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

2022 குழந்தைத் தத்தெடுப்புச் சட்டத்தின்கீழ் எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்று அமைச்சர் சண்முகம் சொன்னார்.

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் பிள்ளைகள் கடத்தல், சட்டவிரோதக் குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பில் எத்தனை சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் எழுத்துபூர்வ பதில் தந்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்