$139,001 - சிறிய கார்களுக்கான COE கட்டணம் புதிய உச்சம்!
படம்: CNA/Hester Tan
This audio is generated by an AI tool.
வாகன உரிமைச் சான்றிதழ்க் (COE) கட்டணம் A பிரிவில் புதிய உச்சத்தைத் தொட்டது.
அண்மை ஏலத்தில் A பிரிவு அல்லது குறைந்த ஆற்றல் கொண்ட கார்களுக்குக் கட்டணம் 139,001 வெள்ளியானது.
முந்தைய ஏலத்தில் எட்டிய தொகையை விட சுமார் 7,000 வெள்ளி அதிகம்.
B பிரிவில் அல்லது பெரிய கார்களுக்கான கட்டணம்..
இப்போது - $132,334
முன்னர் - $131,901
வர்த்தக வாகனச் சான்றிதழ்க் கட்டணம் முன்பு போல் 92,000 வெள்ளியாக இருந்தது.
மோட்டார்சைக்கிள் சான்றிதழ் கட்டணம் குறைந்தது...
இப்போது - $10,689
முன்னர் - $10,778
பொதுப் பிரிவு வாகனங்களுக்கான கட்டணம் கூடியது...
இப்போது - $135,998
முன்னர் - $135,790
ஏலத்தில் 3,259 வாகன உரிமைச் சான்றிதழ்கள் இடம்பெற்றன.
அவற்றுக்கு 4,722 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.