$2.7 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறிய Cathay Cineplexes மீது சட்ட நடவடிக்கை
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Facebook/Cathay Cineplexes)
சிங்கப்பூரின் பிரபல திரைப்பட நிறுவனமான Cathay Cineplexes, 2.7 மில்லியன் வெள்ளி கடனைச் செலுத்தத் தவறியதற்காக அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Century Square, Causeway Point, ஆகிய இடங்களில் வாடகை, இதர கட்டணங்களை அது செலுத்தவில்லை என்று கூறப்பட்டது.
Cathay Cineplexesஐ நிர்வகிக்கும் mm2 Asia, சட்ட அறிக்கையைப் பெற்றதாகச் சொன்னது.
இரண்டு கடைத்தொகுதிகளின் முதலாளிகளும் இம்மாதம் 10ஆம் தேதிக்குள் கடனைத் திருப்பிக் கொடுக்க அவகாசம் அளித்துள்ளனர்.
Cathay Cineplexes, கடந்த 2 ஆண்டுகளில் AMK Hub, Orchard Cineleisure, Cathay Building, Parkway Parade ஆகிய வளாகங்களில் இருந்த
4 திரையரங்குகளை மூடியது.
இருப்பினும், திரையரங்க வர்த்தகத்தில் இன்னும் நம்பிக்கையுள்ளதாய்க் கூறும் நிறுவனம் கடந்த அக்டோபரில் (2024) 321 Clementiஇல் உள்ள 'WE Cinemas'க்குச் சொந்தமான திரையரங்கை வாங்கியது.

ஆதாரம் : CNA