Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கல்வி நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பாலர்பள்ளிகள் தவிர்த்து மற்ற கல்வி நிலையங்களிலும் பராமரிப்பு மையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அனைத்து பாலர்பள்ளிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

அமைச்சு நடத்தும், நிதியளிக்கும் அல்லது அமைச்சின் உரிமம் பெற்ற அனைத்துக் குடியிருப்பு வசதிகளிலும் தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுவான இடம் அல்லது ஆபத்து அதிகமுள்ள நடைபாதைகள், நடவடிக்கை அறைகளில் கேமராக்கள் உள்ளன.

சிறுவர்கள், உடற்குறையுள்ளோர், வயதானவர்கள் ஆகியோரைக் கவனித்துக்கொள்ளும் நிலையங்களிலும் நெருக்கடி காலத் தங்குமிடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கின்றன.

அன்றாட நடவடிக்கை நிலையங்கள், தங்குமிடத்துடன் கூடிய பட்டறைகளில் இரண்டைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன.

அந்த 2 இடங்களில் அடுத்துவரும் மாதங்களில் கேமராக்களைப் பொருத்தும் திட்டமிருப்பதாக அமைச்சர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்