Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துணிந்து இறங்கினேன் - கல்வி வேறு கற்றல் வேறு- அசைக்கமுடியா நம்பிக்கையுடன் முன்னேறும் மாது

#CelebratingSGWomen

வாசிப்புநேரம் -

#CelebratingSGWomen

சிங்கப்பூரில் கல்வி என்பது மிக முக்கியமானது. சான்றிதழ்கள் சிறந்த வேலைகளில் சேர உதவுகின்றன.

ஆனால் கற்றல் வேறு கல்வி வேறு. கல்வியை எப்போது வேண்டுமோ கற்கலாம், தொடரலாம், நிறுத்தலாம். ஆனால் கற்றல் நின்றுவிடக்கூடாது என்ற நம்பிக்கையுடன் பேசுகிறார், 30 வயது ஷாரன் எஸ்தர்.

சிங்கப்பூர் பெண்களைப் போற்றும் இந்த ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, துணிந்து வித்தியாசமான துறையில் கால்பதித்து, முன்னேறும் சில பெண்களின் கதைகள் 'செய்தி'-இல் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில்.....

ஷாரன், விரல், கால் நகங்களை அழகுபடுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

நகங்களை அலங்கரிப்பதோடு வாடிக்கையாளர்களிடையே தன்னம்பிக்கையையும் கூட்டுகிறார்.

வேலை எவ்வகையில் வேறுபட்டது?

வீட்டுக்கு வீடு சென்று பிறரின் கால் விரல் நகங்கள், கைவிரல் நகங்கள் ஆகியவற்றைப் பராமரித்து அலங்கரிக்கிறார் ஷாரன்.

சிங்கப்பூரில் பலர் செய்யத் தயங்கும் வேலை இது.

சவால்கள் ஏராளம்

வீட்டுக்கு வீடு சென்று இவ்வாறு சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் உண்டு. கனமான சாதனங்கள், நகச் சாயங்கள், போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும்.

அது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் கேட்கும் வித்தியாசமான நக அலங்காரத்தையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த சிரமங்களினால் சிங்கப்பூரில் பல நகப் பராமரிப்பு ஊழியர்கள் அழகுப் பராமரிப்பு நிலையங்களில் மட்டுமே வேலை பார்க்க விரும்புவர். வீட்டுக்கு வீடு சென்று சேவை வழங்குவோர் மிகவும் குறைவு.

வெற்றிக்குப் பல வழிகள் உண்டு

தமது கற்றல் பயணத்தைத் தொடர ஆக மலிவான அழகுப் பராமரிப்பு வகுப்பொன்றிற்குப் பதிவு செய்தார் இவர். அதன் பிறகு, சொந்தமாகத் தொழிலைத் தொடங்கினார்.

அதிகம் செலவு செய்து வகுப்புகளுக்குச் செல்வதன் மூலம் மட்டுமே கல்வி தொடர்வதில்லை என்பது இவரது வாதம்.

தனி அடையாளத்தில் நம்பிக்கை

ஆரம்பத்திலேயே என் அடையாளத்தைத் தெரிந்துகொண்டேன்; அதன் மூலம் தன்னம்பிக்கை பெறுகிறேன்.

வேலையில் அடுத்தது என்ன செய்யலாம் என்பதைத் திட்டமிடுவதிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் சேவை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளிப்பதிலும் பல மணி நேரம் செலவிடுகிறார் இவர்.

கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மிக முக்கியமானது, அது ஒருவரின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்.

என்ன செய்கிறோம் என்பதை விட அதை எப்படிச் செய்கிறோம் என்பதை மட்டுமே சிந்தித்து, ஒவ்வொரு நாளையும் புத்துணர்வோடு தொடங்குகிறார், ஷாரன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa