துணிந்து இறங்கினேன் - பருமனாக இருப்பதில் வெட்கமில்லை! #CelebratingSGWomen
உலகில் பெண்கள் பலவிதம். ஆனால் அவர்களின் தனித்துவத்தைப் பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக வகைப்படுத்துகிறது சமுதாயம்.

உலகில் பெண்கள் பலவிதம். ஆனால் அவர்களின் தனித்துவத்தைப் பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக வகைப்படுத்துகிறது சமுதாயம்.
சிங்கப்பூர் பெண்களைப் போற்றும் இந்த ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, துணிந்து வித்தியாசமான துறையில் கால்பதித்து, முன்னேறும் சில பெண்களின் கதைகள் 'செய்தி'-இல் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில்.....

தமது தாயாரும் மற்ற பெண்களும் தமக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகப் பகிர்ந்துகொண்டார் ராணி.
எப்படித் தோன்றியது?


இருப்பினும் அச்சமும் இவரை ஆட்கொண்டது.
சில நேரங்களில் தமது எண்ணம் சரிதானா, இந்தத் தொழிலில் வெற்றிபெற முடியுமா போன்ற கேள்விகள் தோன்றும்.
பிழையற்றது ஏதுமில்லை!
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல் தொடர்ந்து அதிலிருந்து மீண்டு வருவதைத் தமது சிறந்த தன்மையாகக் கருதுகிறார் இவர்.

பிழையற்றது ஏதுமில்லை... பிழையற்ற வாழ்வுக்காகக் காத்திருக்கக் கூடாது. ஒரு வேலையில் துணிந்து இறங்கலாம் என்று தீர்மானித்தால், அது பிழையில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கக்கூடாது.
பிழைகள் இயல்பானவை. ஆனால் வாய்ப்புகள் அரிதானவை.
அதனால் நினைத்த பொழுதில் செயலில் இறங்க வேண்டும் என்று ஊக்கம் அளிக்கிறார் இவர்.
என்னைப் போன்ற பெண்களே எனக்கு மிகப் பெரிய ஆதரவு
சமுதாயக் கண்ணோட்டம்

பயமின்றி, தேவையற்ற வெட்கமின்றி, தன்னம்பிக்கையுடன் இருக்கும் பருமனான பெண்களைக் காணும் போது, தன்னம்பிக்கை பிறப்பதாகச் சொல்கிறார் ராணி.
பருமனான பெண்களைப் பற்றிய தாழ்வான மனப்போக்கை மாற்றவேண்டும்; சாதிப்பதை உடல் எடை நிர்ணயிக்காது
என்பதைத் தமது வாழ்க்கையின் மூலம் உணர்த்த முற்படுகிறார் ராணி.