மத்திய சமையலறைத் திட்டத்தால் உணவை வீணாக்கும் போக்கு அதிகரித்துள்ளதா?
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Raydza Rahman)
கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) பள்ளிகளில் வீணாக்கப்படும் உணவு, உணவை மாணவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாய் விளங்குவதாகக் கூறியுள்ளார்.
மத்திய சமையலறைத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படும் பள்ளிகளில் ஏற்படும் கழிவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இத்தகைய கழிவுகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளதாகத் திரு லீ சுட்டினார்.
மாணவர்களின் விருப்பங்கள், உணவின் அளவு, புதிய உணவு வகைகளை மாணவர்கள் எந்த அளவுக்கு வரவேற்கின்றனர் என்பதைப் பொறுத்து கழிவுகள் வேறுபடுவதாக அவர் சொன்னார்.
தற்போதைய நிலவரப்படி பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிகம் வீணாக்கப்படுவதாகத் திரு லீ சொன்னார்.
இந்தப் போக்கு பாரம்பரியப் பள்ளி உணவகங்களிலும் காணப்படுகிறது;
மாணவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப தொடர்ந்து உணவின் தரத்தை மேம்படுத்த கல்வி அமைச்சும் பள்ளிகளும் உணவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றார் திரு லீ.
அதிகமாக விரும்பப்படாத உணவு வகைகளை நீக்குவது, வயதுக்கு ஏற்ற அளவு உணவை வழங்குவது, உணவின் தோற்றத்தை இன்னும் கவர்ச்சிகரமாக்குவது ஆகிய முயற்சிகள் எடுக்கப்படும்.
மாணவர்கள் தங்கள் உணவை விரும்பிச் சாப்பிட்டு கழிவுகளைக் குறைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் கல்வி அமைச்சு சுகாதார மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து பணியாற்றும் என்றார் திரு லீ.

ஆதாரம் : Mediacorp Seithi