Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எதிர்காலத்தில் கிருமிப்பரவல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கப் பொதுச் சுகாதார நிலையம் அமைக்கப்படும்: துணைப் பிரதமர் வோங்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் எதிர்காலத்தில் கிருமிப்பரவல் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க பொதுச் சுகாதார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்படும்.

நோய் வருவதை முன்கூட்டியே கண்டறிந்து சிங்கப்பூரை ஆயத்தப்படுத்துவது நோக்கம்.

திரு. வோங் இன்று கோவிட்-19 வெள்ளை அறிக்கை தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

நோய் வேகமாகப் பரவாமல் தடுப்பதற்கு சிங்கப்பூர் மேலும் தயாராக இருப்பது முக்கியம் என்றார் அவர்.

சிங்கப்பூர் ஏற்கனவே ஆற்றல் பெற்றுள்ளது. ஆனால் அது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம், சுகாதார அமைச்சு போன்ற பல்வேறு இடங்களில் பரவியிருக்கிறது. அவற்றை ஒன்றிணைப்பது அவசியம் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

எனவே அதன் பொருட்டு வேறு சில நாடுகளில் இருப்பது போன்ற நோய்க் கட்டுப்பாட்டு நிலையங்கள் தேவை என்று அவர் சொன்னார்.

மூன்று ஆண்டுக் காலம் கற்றுத் தந்த பாடத்தை வைத்து சிங்கப்பூர் எதிர்காலத்துக்குத் தயாராக வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்