Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு துரிதப்படுத்தப்படுகிறது

வாசிப்புநேரம் -
நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு துரிதப்படுத்தப்படுகிறது

(படம்: TODAY/Ernest Chua))

நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்த சிங்கப்பூர் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைத் துரிதப்படுத்தி வருகிறது.

சுகாதாரப் பராமரிப்புப் புத்தாக்க நிலையத்தின் உதவியோடு அது சாத்தியமாகவுள்ளது.

அதற்கான புதிய இணையத்தளம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.

மருத்துவ நிபுணர்களின் திறன்களை விரிவுபடுத்துவதில் மிகை மெய்நிகர் தொழில்நுட்பமும் பெரிய பங்கு வகிக்கவுள்ளது.

நோயாளி படுக்கையிலிருந்து விழும் தறுவாயில் இருந்தால் இந்தச் சாதனம் ஒலி எழுப்பிப் பராமரிப்பாளர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும்.

தொலைநிலைக் கண்காணிப்பு முறை, மருந்து விநியோகம் செய்யும் இயந்திர மனிதக் கருவி போன்ற புத்தாக்கங்கள் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறைையைச் சமாளிக்க இயலும் என்று நம்பப்படுகிறது.

C-H-I Innovate நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகப் பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) துறையை மறுவடிவமைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியதன் தேவையை வலிறுத்தினார்.

கட்டமைப்பை மேம்படுத்துவதில் புத்தாக்கம் மிகவும் முக்கியம் என்றார் அவர்.

Reimagination Plaza எனப்படும் பகிர்வு இடமும் அதற்கு வழிவிடும்.

துறை சார்ந்தோர், அரசாங்க அமைப்புகள், லாப நோக்கமற்ற அமைப்புகள் ஒன்றுதிரள அது வகைசெய்யும்.

மின்னிலக்கமயமாதல் மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவது அதன் நோக்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்