Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எந்தப் பள்ளியில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை; ஆற்றும் சேவையே முக்கியம் - புதிய பள்ளிக்குச் செல்லும் முதல்வர்

சிங்கப்பூரின் 59 பள்ளிகள், புதிய முதல்வர்களின் தலைமையில் செயல்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் 59 பள்ளிகள், புதிய முதல்வர்களின் தலைமையில் செயல்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

20 ஆண்டு அனுபவம் கொண்ட திரு. முகுந்தன் சுப்ரமணியம், முதல்வர் நியமனத்தை ஏற்றுக்கொள்ளவிருப்போரில் ஒருவர்.

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் 7 ஆண்டாய் முதல்வராகப் பணியாற்றிய அவர், புதிய பள்ளிக்கு மாற்றப்படுகிறார்.

அதையொட்டித் திரு. மைக்கேல் முகுந்தனிடம் பேசியது, 'செய்தி'.

அது எனக்குச் சற்று சோகமளிக்கிறது. எனக்குப் பள்ளியில் பல நினைவுகள் உள்ளன. மாணவர்கள் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தமுடிந்தது,

என்று அவர் சொன்னார்.

முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறை அறிமுகமாவதற்கு முன்னர், ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் முன்னோடித் திட்டம் நடத்தப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

(படம்: Jurong West Secondary School)

(படம்: Jurong West Secondary School)

அதன்வழி மாணவர்கள் பெரும் அளவில் பலனடைந்தனர் என்றும் அவர்களின் திறனை வெளிப்படுத்த வகைசெய்தது என்றும் திரு. முகுந்தன் கூறினார்.

புதிய பள்ளியில் பணியாற்றக் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

எந்தப் பள்ளியில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை; ஆற்றும் சேவையே முக்கியம்,

என்று திரு. முகுந்தன் தெரிவித்தார்.

அவர், பெய்சாய் உயர்நிலைப் பள்ளியின் புதிய முதல்வராகச் செயல்படவிருக்கிறார்.

முதலில், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பேசி, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் தெரிந்துகொள்ளவிருப்பதாகத் திரு. முகுந்தன் தெரிவித்தார்.

அவ்வாறு செய்வது பள்ளியின் நடைமுறையைப் பற்றி அறிந்துகொள்ளவும் அதை மேம்படுத்தவும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.

பள்ளி நடைமுறை என்பது, தலைமைத்துவத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பள்ளியில் உள்ள அனைவராலும் நிர்ணயிக்கப்படுகிறது,

என்று திரு. முகுந்தன் சொன்னார்.

புதிய பள்ளிக்குச் சென்றபிறகு, முந்திய முதல்வர் செய்த நற்பணிகளைத் தொடர ஆவலாய் இருப்பதாக அவர் கூறினார்.

முதல்வர்களின் வருடாந்திர நியமன, பாராட்டு நிகழ்ச்சி இவ்வாண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்