சிங்கப்பூரின் புதிய அமைச்சரவை - அறிவித்தார் பிரதமர்

படம்: CNA/Marcus Mark Ramos
சிங்கப்பூரின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், மூத்த துணையமைச்சர்கள், துணையமைச்சர்கள் ஆகியோர் நாளை மறுநாள் (23 மே) பதவியேற்றுக்கொள்வர்.
திரு லாரன்ஸ் வோங் - பிரதமர்
திரு கான் கிம் யோங் (Gan Kim Yong) - துணைப் பிரதமர்
திரு லீ சியன் லூங் (Lee Hsien Loong) மூத்த அமைச்சர்
அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதமர் வோங் இன்று அறிவித்தார்.
6 அமைச்சர்கள் ஓய்வுபெறுகின்றனர்.
நால்வர் பதவி உயர்வு பெறுகின்றனர்.
9 பேர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.

ஓய்வுபெறும் அமைச்சர்கள்......
📌 ஹெங் சுவீ கியட் (Heng Swee Keat)
📌 தியோ சீ ஹியென் (Teo Chee Hean)
📌 இங் எங் ஹென் (Dr Ng Eng Hen)
📌 மாலிக்கி ஒஸ்மான் (Dr Maliki Osman)
📌 ஹெங் சீ ஹாவ் (Heng Chee How)
📌 ஏமி கோர் (Dr Amy Khor)
பல ஆண்டுகளாக அவர்கள் ஆற்றிய சேவைக்குப் பிரதமர் வோங் நன்றி தெரிவித்தார்.
பதவி உயர்வுபெறும் அமைச்சர்கள்
📌முகமது ஃபைஷல் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim)
📌முரளி பிள்ளை (Murali Pillai)
📌சுன் ஷுவெலிங் (Sun Xueling)
ஆகிய மூவரும் மூத்த துணையமைச்சர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.
📌பே யாம் கெங் (Baey Yam Keng) துணையமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.
சில முக்கிய அமைச்சுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்......
📌தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகத் திரு கா சண்முகம் நியமனம் பெறுகிறார். அவர் சட்ட அமைச்சர் பொறுப்பைத் துறப்பார். உள்துறை அமைச்சராகத் தொடர்வார்,
📌பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தற்காப்பு அமைச்சராகவும் திரு சான் சுன் சிங் (Chan Chun Sing) நியமிக்கப்படுகிறார்.
📌கல்வி அமைச்சராகத் திரு டெஸ்மண்ட் லீ (Desmond Lee) நியமனம் பெறுகிறார். அவர் தேசிய வளர்ச்சி அமைச்சர் பொறுப்பைத் துறப்பார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக சேவைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் தலைவராக நீடிப்பார்.
📌திரு எட்வின் தோங் (Edwin Tong) சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்பார். உள்துறை அமைச்சில் 2ஆம் அமைச்சராகவும் நியமிக்கப்படுவார். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் பொறுப்பைத் துறப்பார்.
📌டாக்டர் டான் சீ லெங் (Dr Tan See Leng) மனித வள அமைச்சராகத் தொடர்வார். வர்த்தக, தொழில் அமைச்சின்கீழ் இயங்கும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நியமனம் பெறுகிறார்
📌போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தேசிய வளர்ச்சி அமைச்சராகிறார். இரண்டாம் நிதி அமைச்சர் பொறுப்பைத் துறப்பார்.
📌சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார் திரு ஓங் யீ கங் (Ong Ye Kung). அவர் சுகாதார அமைச்சராகத் தொடர்வார்.
📌கலாசார, சமூக, இளையர் துறைக்கான தற்காலிக அமைச்சராகப் புதியவர் டேவிட் நியோ (David Neo) நியமிக்கப்படுகிறார்.
📌போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சராகிறார் புதியவர் ஜெஃப்ரி சியோவ் (Jeffrey Siow).
📌தினேஷ் வாசு தாஸுக்குக் கலாசார, சமூக, இளையர் அமைச்சு, மனிதவள அமைச்சு இரண்டிலும் துணையமைச்சர் பொறுப்பு வழங்கப்படுகிறது. தென்கிழக்கு வட்டார மேயர் பொறுப்பையும் அவர் ஏற்பார்.
📌புதியவர்கள் டெஸ்மண்ட் சூ (Desmond Choo), ஜாஸ்மின் லாவ் (Jasmin Lau), கோ பெய் மிங் (Goh Pei Ming), ஸுல்கர்னைன் அப்துல் ரஹீம் (Zhulkarnain Abdul Rahim) ஆகியோருக்கு வெவ்வேறு அமைச்சுகளில் துணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.