Executive கூட்டுரிமை வீடுகள் என்ன மாற்றம்?
படம்: Hong Leong Holdings
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் (executive condominium) ...
இந்த வீடுகளின் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம் இரட்டிப்பாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சு அதனை அறிவித்துள்ளது.
குறைந்தபட்ச வசிப்புக் காலம் (MOP)
முன்பு: 5 ஆண்டுகள் வசித்தால் வீட்டை விற்க அல்லது முழுமையாக வாடகைக்கு விட முடியும் அல்லது இன்னொரு வீடு வாங்க முடியும்.
இப்போது: இப்போது அது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழுமையான தனியார் வீடாகும் காலம்
முன்பு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது முழுமையான தனியார் வீடாகும். வெளிநாட்டினருக்கு விற்க முடியும்.
இப்போது: 15 ஆண்டுகளுக்குப் பிறகே இனி அது சாத்தியம்.
முதன்முறை வாங்குவோருக்கான ஒதுக்கீடு (Quota)
முன்பு: கட்டுமான நிறுவனங்கள் 70% வீடுகளை முதன்முறை விண்ணப்பம் செய்வோருக்கு ஒதுக்கின.
இப்போது: இது 90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னுரிமைக் காலம்
முன்பு: முதன்முறை விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு மாதம் மட்டுமே முன்னுரிமை இருந்தது.
இப்போது: அந்த முன்னுரிமைக் காலம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்களின் நோக்கம்?
1. இளம் தம்பதிகள், முதன்முறை வீடு வாங்குபவர்களுக்கு உதவுவது...
2. வீட்டை ஒரு முதலீடாக வைத்து லாபம் ஈட்ட நினைப்பவர்களைத் தடுப்பது...
3. உண்மையாகத் தேவையுள்ளவர்களுக்கு வீடுகள் கிடைப்பதை உறுதிசெய்வது...