Skip to main content
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு - ஆஸ்திரேலிய ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் இரு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 45 வயது ஆஸ்திரேலிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆடவர் ஒன்றாம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் அமைந்துள்ள Shilla Cosmetic and Perfumes கடையிலிருந்து பொருள்களைத் திருடியதாகக் கூறப்பட்டது.

சந்தேக நபர் 466 வெள்ளி பெறுமானமுள்ள முகத்துக்குப் பூசும் பொருளை முதலில் திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் மூலமும் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியோடும் அவர் அடையாளம் காணப்பட்டு ஜூன் 1ஆம் தேதி பிடிபட்டார்.

ஆடவர் அதே நாள் அதே கடையிலிருந்து 193 வெள்ளி பெறுமானமுள்ள வாசனைத் திரவத்தையும் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்துச் சென்ற மாதம் (மே 2025) 27ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை சொன்னது.

ஆடவர் மீது நாளை (12 ஜூன்) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரையிலான சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்