சாங்கி விமான நிலையத்தில் புதிய கட்டடம் - முனையங்களுக்கு அப்பால் நிறுத்தப்படும் விமானங்களுக்கு வசதியாக...
வாசிப்புநேரம் -
படம்: Changi Airport Group
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் முனையங்களுக்கு அப்பால் நிறுத்தப்படும் விமானங்களுக்கு வசதியாகப் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
விமானங்களிலிருந்து பயணிகள் இறங்க அதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இணைப்புப் பாலங்கள் இருக்கும்.
அவர்கள் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடுபாதையைக் கடந்து பேருந்துகளில் செல்ல இனித் தேவையிருக்காது.
சக்கர நாற்காலியில் வருவோர், முதியோர், குழந்தைத் தள்ளுவண்டிகளுடன் வரும் குடும்பங்கள், பயணப் பெட்டிகளுடன் வருவோரின் வசதிக்காக 60 மீட்டர் நீளமுள்ள சரிவுப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் A380, போயிங் 747 ரக விமானங்களைத் தவிர சாங்கி விமான நிலையத்தில் இறங்கும் மற்ற அனைத்து வர்த்தக விமானங்களும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
பயணிகள் தொடர்ந்து பேருந்து மூலம் முனையங்களுக்கும் இந்தத் துணைக் கட்டடத்துக்கும் இடையே செல்ல வேண்டியிருக்கும்.
எனினும் மழை, வெயிலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கத் துணைக் கட்டடத்தில் கூரையுடன் கூடிய நுழைவாயில் இருக்கும்.
பேருந்துப் பயணம் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் நீடிக்கும்.
புதிய வசதி மூலம் பணியாளர்களின் தேவையும் குறையும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தித் தகடுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
விமானம் வரும்போது மட்டுமே குளிர்சாதன வசதி இயக்கப்படும்.

ஆதாரம் : CNA