Skip to main content
உலகிலேயே ஆகப் பரப்பரப்பான விமான நிலையம் எது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகிலேயே ஆகப் பரப்பரப்பான விமான நிலையம் எது?

வாசிப்புநேரம் -
உலகிலேயே ஆகப் பரப்பரப்பான விமான நிலையம் எது?

(படம்: AFP/Roslan Rahman)

சென்ற ஆண்டு (2024) சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் ஆகப் பரப்பரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

துபாய் அனைத்துலக விமான நிலையம் உலகின் ஆகப் பரப்பரப்பான விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டது.

OAG எனும் உலகப் பயணத் தரவு நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

அனைத்துலக விமானச் சேவைகளின் விமான
இருக்கைகளைக் கருத்தில்கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன.

உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன?

1. ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்துலக விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 60,236,220

2. பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 48,358,450

3. தென் கொரியாவின் இன்ச்சியோன் விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 41,633,831

4. சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 41,530,309

5. நெதர்லந்தின் ஆம்ஸ்டர்டம் ஷிபோல் விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 39,998,853

2023ஆம் ஆண்டில் சாங்கி விமான நிலையம் உலகின் ஆகப் பரப்பரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்