Skip to main content
நிப்பா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நிப்பா - சாங்கி விமான நிலையத்தில் பயணிகளிடம் வெப்பப் பரிசோதனை

வாசிப்புநேரம் -

நிப்பா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள இடங்களிலிருந்து வரும் பயணிகளிடம் சாங்கி விமான நிலையத்தில் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் தெற்காசியாவிலிருந்து வரும் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அணுக்கமாகக் கவனிக்கப்படுவார்கள்.

நிப்பா கிருமிப்பரவலைத் தடுக்க சிங்கப்பூர் எடுக்கும் 6 நடவடிக்கைகளில் அவை அடங்கும்.

சிங்கப்பூரின் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

📍கிருமித்தொற்றால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவரது விவரத்தைச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் உடனடியாக அமைப்பிடம் தெரிவிப்பது.

📍பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் நோயாளிகள் அல்லது கிருமித்தொற்றின் அறிகுறிகள் உடைய நோயாளிகள் குறித்து மருத்துவமனைகள் விழிப்புடன் இருப்பது

📍சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளில் சுகாதார ஆலோசனை அறிக்கைகளை வெளியிடுவது

📍சாங்கி விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகளிடம் வெப்பப் பரிசோதனை நடத்துவது

📍தெற்காசியாவிலிருந்து வரும் புதிய வெளிநாட்டு ஊழியர்களை மனிதவள அமைச்சு அணுக்கமாகக் கவனிப்பது. மனிதவள அமைச்சைச் சார்ந்த சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் விழிப்புடன் இருப்பது.

📍தெற்காசிய நாடுகளின் நிலவரத்தை அறிய அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது

நிப்பா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மரபணுவை ஆராய அனைதத்துலகத் தளம் ஒன்று உருவாக்கப்படுவதாகவும் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு கூறியது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் 2 நிப்பா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தொற்றுநோய்கள் அவ்வவ்போது பல்வேறு நாடுகளில் ஏற்படும் என்றும் அனைவரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

சிங்கப்பூர் மக்களைப் பாதுகாக்க உடனடியாகச் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்