சாங்கி விமான நிலையத்தில் திருட்டு - இரு பெண்கள் உட்பட மூவர் சிக்கினர்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Hanidah Amin)
சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் திருடியதாக மூவர் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
ஒருவர் 60 வயது பிரெஞ்சுக்காரர். மேலும் இருவர் இந்திய நாட்டுப் பெண்கள். அவர்களுக்கு வயது முறையே 59, 61.
முதல் சம்பவம் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்தது.
முதலாம் முனையத்தில் உள்ள கடையில் ஒரு ஜோடி கருப்புக் கண்ணாடி காணாமல் போனது.
ரகசியக் கேமராப் பதிவுகள் வாயிலாக அதனைத் திருடியவர் அடையாளம் காணப்பட்டார்.
கண்ணாடியின் மதிப்பு சுமார் 750 வெள்ளி.
விமானத்தில் ஏறவிருந்த அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர். கண்ணாடியை மீட்டனர்.
அவர் திருடிய 69 வெள்ளி மதிப்புள்ள இரு தேநீர் கலன்களும் கைப்பற்றப்பட்டன.
மற்றொரு சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்தது.
மூன்றாம் முனையத்தில் 3 காப்புகள், 3 வளையல்கள், 2 மோதிரங்கள், ஒரு கைக்கடிகாரத்தைத் திருடிய இரண்டு பெண்கள் சிக்கினர்.
பொருள்களின் மதிப்பு சுமார் 2,700 வெள்ளி.
விமானத்தில் ஏறவிருந்த அவர்களைக் கைதுசெய்த அதிகாரிகள் பொருள்களை மீட்டனர்.
பெண்கள் மற்றொரு கடையில் 2 விளையாட்டுக் கார்களையும் சாவிக்கொத்து ஒன்றையும் ஏற்கனவே திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 32 வெள்ளி.
மூவர் மீதும் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi