சாங்கி விமான நிலையத்தில் திருட்டு - இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் கைது

படம்: Changi Airport
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் கடையிலிருந்து திருடிய சந்தேகத்தில் 25 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்தது.
சென்ற மாதம் 23ஆம் தேதியன்று விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருக்கும் கடையிலிருந்து கழுத்துப் பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல்போனதாகக் காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.
அதன் மதிப்பு 480 வெள்ளி.
ஆடவர் அதனைத் திருடியது CCTV கேமராவில் பதிவானது.
அவரது அடையாளம் நிர்ணயிக்கப்பட்டாலும் அவர் சிங்கப்பூரைவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அதன் பின்னர் 28ஆம் தேதியன்று அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து களவாடப்பட்ட பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொருளைத் திருடியதாக ஆடவர் மீது நாளை (4 பிப்ரவரி) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம், அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.