Skip to main content
ஒரு மில்லியன் வெள்ளியைத் தட்டிச் சென்ற ஜப்பானியப் பொறியாளர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஒரு மில்லியன் வெள்ளியைத் தட்டிச் சென்ற ஜப்பானியப் பொறியாளர்

சாங்கி விமான நிலையம் வழங்கிய ஒரு மில்லியன் வெள்ளியைத் தட்டிச் சென்றுள்ளார் 34 வயது ஜப்பானியப் பொறியாளர். 

வாசிப்புநேரம் -

வெளியீடு : 01 Feb 2015 09:41PM புதுப்பிப்பு : 01 Feb 2015 09:47PM

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையம் வழங்கிய ஒரு மில்லியன் வெள்ளியைத் தட்டிச் சென்றுள்ளார் 34 வயது ஜப்பானியப் பொறியாளர். 

சாங்கி விமான நிலையம், இன்று ஒரு மில்லியன் வெள்ளிக்கான அதிர்ஷ்டக் குலுக்கு ஒன்றை நடத்தியது.  அந்தத் தொகையைத் தட்டிச் சென்றார் திரு ஒயாமா செய்ச்சீரோ. இறுதிச்சுற்றில் வந்த ஐந்து பேரை பின்னுக்குத் தள்ளினார் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூர், சீனா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். திரு செய்ச்சீரோ, 79 வெள்ளி மதிப்புள்ள சாக்லட் பெட்டியை வாங்கினார். சிங்கப்பூரிலிருந்து ஹனோய்i சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. வாடிக்கையாளர் ஒருவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க, அந்த சாக்லேட் பெட்டியை வாங்கினார். அதில்தான் அவருக்கான ஒரு மில்லியன் வெள்ளிப் புதையல் ஒளிந்திருந்தது. அந்தத் தொகையை செலவுசெய்வதற்கு அதற்குள் அவர் திட்டமிட்டு விட்டார். மெக்சிகோ செல்லப் போகிறாராம். அங்கு அழகான கடற்கரைகள் இருப்பது அதற்குக் காரணம் என்கிறார் அந்த ஒரு மில்லியன் வெள்ளி அதிர்ஷ்டசாலி.  

 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்