Skip to main content
சாங்கி 5ஆம் முனையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாங்கி 5ஆம் முனையம் - என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

வாசிப்புநேரம் -

சாங்கி விமான நிலைய 5ஆம் முனையத்தின் நிலந்திருந்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

முனையத்தைப் பற்றிய சில சுவையான தகவல்கள்.....

🛫 முனையம் ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளைக் கையாளவிருக்கிறது.
(மற்ற நான்கு முனையங்களும் சேர்த்து 90 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதியைக் கொண்டுள்ளன.)

🛫 ஆண்டுக்கு 140 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதியுடன் உலகின் பிரம்மாண்ட விமான நிலையங்களின் பட்டியலில் சாங்கி சேரும்.

🛫 முனையத்தின் முதற்கட்டம் 2030களின் நடுப்பகுதியில் நிறைவடையும்.

🛫 1080 ஹெக்டர் பரப்பளவுள்ள சாங்கி ஈஸ்ட் மேம்பாட்டுப் பகுதிக்குள் ஐந்தாம் முனையம் கட்டப்படும்.

🛫 முனையம் தற்போதுள்ள நான்கு முனையங்களின் அளவுக்குச் சமமாக இருக்கும்.

🛫 சாங்கி விமான நிலையத்தில் இயங்கும் sky train ரயில் சேவைகள் வழியும் மற்ற போக்குவரத்து வசதிகள் மூலமும் மக்கள் முனையத்துக்கு வந்துசெல்லலாம்.

🚢 புதிய முனையம் தானா மேரா படகுத்துறையுடன் இணைக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.

💨 கடும் வானிலையையும் பருவநிலை மாற்றங்களையும் கையாளும் வகையில் முனையம் வடிவமைக்கப்படும்.

🦠 பெருந்தொற்று ஏற்பட்டால், அபாயம் அதிகமுள்ள பயணிகளைக் கையாளத் தனித்துச் செயல்படும் ஆற்றலை முனையம் கொண்டிருக்கும்.

🛫 முனையம் திறக்கப்பட்டதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமான நிறுவனங்கள் அவற்றின் சேவைகளை அங்கு வழங்கும்.

🛫 5ஆம் முனையம் தயாராகும்போது சாங்கி விமான நிலையம் உலகின் 200க்கும் மேற்பட்ட நகரங்களோடு தொடர்புகளைக் கொண்டிருக்கும். தற்போது அது 170ஆக உள்ளது.

🚅 5ஆம் முனையத்திலிருந்து 2ஆம் முனையத்திற்கு 2.5 கிலோமீட்டர் நீள நிலத்தடி ரயில் சேவை இருக்கும்.

🍃 பயணப் பைகளை எடுக்கும் பகுதியில் செங்குத்தான தோட்டங்கள் அமைக்கப்படும்; இயற்கையான வெளிச்சம் உள்ளே வரும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டிருக்கும்.

🛣️ 5ஆம் முனையத்தை தானா மேரா கோஸ்ட் ரோடு, ஈஸ்ட் கோஸ்ட் பார்க் வே, தீவு விரைவுச் சாலை ஆகியவற்றுடன் இணைக்கச் சாலைகள் கட்டப்படும்.

🚅 தாம்சன் -ஈஸ்ட் கோஸ்ட் பாதை, குறுக்குத் தீவுப் பாதை ஆகிய ரயில் பாதைகளையும் 5ஆம் முனையத்துடன் இணைக்கத் திட்டமுள்ளது.

🇦🇮  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு விமானச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தரையிறங்கும் நேரத்திற்கு ஏற்ப முனையத்தில் வசதிகள் கூட்டி, குறைத்துக்கொள்ளப்படும்.

🤖 மழை, மின்னல் ஆகியவற்றிலும் செயல்படக்கூடிய மனித இயந்திரக் கருவிகள் சோதிக்கப்படுகின்றன. முனையத்தில் பயணப்பைகளைக் கையாள அவை பயன்படுத்தப்படும்.

 

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்