Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்தோருக்கு ஆரோக்கிய உணவைக் கொண்டுசேர்க்கும் அறநிறுவனங்கள்...

வாசிப்புநேரம் -
தேவையுள்ள மூத்தோருக்கு ஆரோக்கியமான உணவைக் கொண்டுசேர்க்கும் வழிகளை அறநிறுவனங்கள் ஆராய்ந்துவருகின்றன.

அது குறித்து விழிப்புணர்வூட்டும் பணிகளை 2020ஆம் ஆண்டில் தொடங்கியது ஓர் அமைப்பு.

அப்போதிருந்து ஆரோக்கியமற்ற உணவை நன்கொடையாக வழங்கும் போக்கு 30 விழுக்காடு குறைந்திருப்பதாக Lions Befrienders அறநிறுவனம் கூறுகிறது.

நன்கொடையாளர்கள் நல்லெண்ணத்தில் அத்தகைய உணவை வழங்கினாலும் மூத்தோரின் ஆரோக்கியத்துக்குச் சில நேரங்களில் அது உகந்ததாக இருப்பதில்லை.

குறிப்பாகச் சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்திருக்கும் சில உணவுவகைகள்.

மூத்தோருக்குப் புரதச் சத்து, கேல்சியம் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுவது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்டங்கட்டமாக மூத்தோரின் உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சி எடுக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு வழி, மூத்தோருக்குச் சமைத்த உணவைக் கொண்டுசேர்ப்பது.

நாளுக்கு நூற்றுக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை நன்கொடையாக வழங்குகிறது உணவகம்.

சமூகம் தொடர்ந்து ஆரோக்கியமான சமைக்கும் பொருள்களை வழங்கினால் அந்தச் சேவையைத் தொடர முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்