Skip to main content
உருட்டுப் பந்துப் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உருட்டுப் பந்துப் போட்டி - சிங்கப்பூருக்குத் தங்கம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் உருட்டுப் பந்துப் போட்டியில் சிங்கப்பூரின் ஷார்மேன் சாங் (Charmaine Chang) தங்கம் வென்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர்ப் பிரிவில் அவர் மலேசியாவைச் சேர்ந்த நடாஷா ரோஸ்லானுக்கு (Natasha Roslan) எதிராகக் களமிறங்கினார்.

234-191 என்ற புள்ளிக் கணக்கில் சாங் தங்கத்தைத் தம் வசப்படுத்தினார்.

இதற்கு முன்பு 2022இல் நடந்த போட்டியில் செரி டான் (Cherie Tan) தங்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார்.

2023ஆம் ஆண்டு நடந்த போட்டியில் உருட்டுப் பந்து இடம்பெறவில்லை.

தாய்லந்தில் நடைபெறும் 33ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை mewatch தளத்தில் நேரடியாகக் காணலாம்.

மீடியாகார்ப் ஸ்போர்ட்ஸின் (Mediacorp Sports) டிக்டொக், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்பூக் (Tiktok, Instagram, Facebook) தளங்களில் போட்டிகள் குறித்த அண்மைத் தகவல்களைப் பெறலாம்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்