Skip to main content
வேலை செய்யப் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய ஆடவர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலை செய்யப் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
வேலை செய்யப் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய ஆடவர் கைது

(கோப்புப் படம்: CNA/Jeremy Long)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வேலை செய்ய பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய 41 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுப்பிப்புப் பணி நிறுவனத்தில் வேலை செய்வதாக அவர் தம்மை அறிமுகம் செய்துகொண்டார்.

அதன்படி அவரைப் புதுப்பிப்பு வேலைக்கு அழைத்துள்ளார் ஒருவர்.

86,000 வெள்ளிக்கு அதிகமான தொகை கொடுத்த பிறகும் புதுப்பிப்பு வேலை நிறைவடையவில்லை.

அதனை அறிந்த பாதிக்கப்பட்டவர் அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பதைக் கண்டுபிடித்துக் காவல்துறையிடம் புகார் செய்தார்.

காவல்துறை அவரை அடையாளம் கண்டது. அதேபோன்ற மேலும் சில மோசடிகளிலும் அவருக்குத் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

புதுப்பிப்பு நிறுவனங்கள் அல்லது குத்தகைதாரர்களை நியமிக்கும்முன், அவர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

வேலைகளைத் தொடங்கும்முன் அதிகத் தொகையைச் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை நினைவுறுத்துகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்