Skip to main content
தேர்தலில் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேர்தலில் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் - பதிவேட்டிலிருந்து நீக்கம்

வாசிப்புநேரம் -
இவ்வாண்டின் பொதுத்தேர்தலில் வாக்களிக்கத் தவறிய தகுதிபெற்ற வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் 1954 இன் 43ஆம் பிரிவின் கீழ் அந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது தேர்தல் துறை.

வரும் (மே) 30ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரர்கள் தங்கள் விவரங்களையும் வாக்காளர் நிலையையும் சரிபார்க்கலாம்.

வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்கவும் அவர்கள் பதிவு செய்யலாம்.

-- தேர்தல் துறையின் இணையப்பக்கம் (https://www.eld.gov.sg/online.html)
-- Singpass செயலி

ஆகியவற்றில் அதனைச் செய்யலாம்.

இணையத்தில் தங்கள் விவரங்களைச் சரிபார்க்க இயலாதோர் சமூக மன்றங்கள், ServiceSG நிலையம் அல்லது தேர்தல் துறை அலுவலகத்தில் அதைச் செய்யலாம்.

வாக்களிக்கத் தவறியோர் தங்களைப் பற்றிய விவரங்களைச் சேர்த்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்