Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காகப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடருவது அவசியம்"

வாசிப்புநேரம் -
"அனைத்து சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காகப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடருவது அவசியம்"

FB/Chee Hong Tat

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) சிங்கப்பூரில் சில நடைமுறைகள் நீடிப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

குழுத்தொகுதி முறை, ஒரு தனிப்பட்ட சமூகத்தினரைச் சேர்ந்த ஒருவரை அதிபராகத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல் போன்றவற்றை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

அவை தற்போதைக்குத் தொடருவது அவசியம் என்று வலியுறுத்திய திரு சீ நடைமுறைகளை உடனடியாக அகற்றுவது ஆபத்தில் முடியக்கூடும் என்றார்.

பாதுகாப்பு நடைமுறைகள் கட்டுப்பாடுகள் அல்ல.

அவை மக்களைப் பாதுகாத்து ஒற்றுமையாக முன்னேறத் தொடர்ந்து உதவக்கூடியவை என்று அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

சமூகத் தலைவர்களுக்கான மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

கொள்கை ஆய்வுக் கழகம் ஏழாவது முறையாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏறத்தாழ 200 சமூக, சமயத் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஆய்வுக் கழகம் மேற்கொண்ட இன, சமய நல்லிணக்கக் குறியீடுகள் பற்றிய ஆய்வின் முடிவுகள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்