Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

கோழி இல்லையென்றாலும்... தெரிவுகள் பல: ஊட்டச்சத்து நிபுணர்கள்

வாசிப்புநேரம் -

அனைத்து மாமிச வகைகளுடன் ஒப்பிடுகையில், கோழியே சிங்கப்பூரில் அதிகம் சாப்பிடப்படும் இறைச்சி.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் தகவல்கள்படி, 2020-ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் சராசரியாக ஒவ்வொருவரும் 36 கிலோகிராம் கோழியைச் சாப்பிட்டனர்.

அடுத்தபடியாகப் பன்றி இறைச்சியும், மீனும் அதிகம் உட்கொள்ளப்பட்டன.

கோழிகளை ஏற்றுமதி செய்வதற்கு மலேசியா தடை விதித்துள்ளதை அடுத்து, மக்கள் உணவுத்தெரிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

குளிரில் பதப்படுத்தப்பட்ட கோழிக்குப் பதிலாக உறையவைக்கப்பட்ட கோழியோ மற்ற மாமிச வகைகளையோ தேர்ந்தெடுக்கலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

உணவியல் வல்லுநர் ஷீட்டல் சோமையாவும், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொழில்நுட்ப, புத்தாக்க, தொழில் பிரிவின் ஊட்டச்சத்து குறித்த மூத்த நிபுணர் கேரலின் ஸ்டீஃபனும் அதன் தொடர்பில் 'செய்தி'யிடம் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கோழிக்கு ஈடான  ஊட்டச்சத்தை வழங்கும் மாற்று உணவுவகைகள் என்னென்ன?

(படம்: Facebook/Health Promotion Board)

உணவுத் தட்டு அளவில்  கால்வாசி எப்போதும் புரதச்சத்துக்கு ஒதுக்கப்படுவது சிறப்பு.

உள்ளங்கை அளவிலான அந்தப் புரதச்சத்து ஒரு 'serving' என்றும் அழைக்கப்படுகிறது. 

அவ்வாறு அன்றாடம் இரண்டிலிருந்து மூன்று முறை வரை புரதச்சத்தை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியைப் பொறுத்தவரை, ஒரு 'serving' என்பது 90 கிராம்.

கோழிக்கு ஈடான  ஊட்டச்சத்தை வழங்கும் மாற்று உணவுவகைகள் என்னென்ன?

- 90 முதல் 100 கிராம் வரை ஆட்டு இறைச்சி, வாத்து, மான் இறைச்சி (எலும்பில்லாமல்)

அத்தகைய இறைச்சி வகைகளில் பொதுவாக இரும்புச் சத்தும் அதிகம் உண்டு என்று திருமதி கேரலின் சொன்னார்.

- 500 மில்லிலிட்டர் பால் பொருள்கள் (கொழுப்புக் குறைந்த)

(படம்: Unsplash/Mike Bergmann)

- 90 கிராம் இறால் துண்டுகள் 

புரதச்சத்திற்கு இறால், கனவாய் உட்பட கடலுணவு வகைகளையும் மக்கள் நாடலாம். 

இருப்பினும், அவற்றை உட்கொள்வது மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகரிக்கக்கூடிய அபாயம் உண்டு. அவற்றைச் சற்று கவனமாகச் சாப்பிடவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினர்.

படம்: Pixabay/Fabrizio Bucella

- 150 கிராம் முட்டை 

நல்ல தரம் வாய்ந்த புரதச்சத்து என்றால் அதை முட்டைகளிலிருந்து பெறலாம் என்று திருமதி கேரலின் பரிந்துரைத்தார்.

- 90 முதல் 100 கிராம் வரை சமைத்த மீன்

Cod, Salmon, Mackerel, Tuna போன்ற ஆரோக்கியமான மீன் வகைகள் பல உள்ளன.

அவற்றை உட்கொள்வது மூலம் Omega-3 ஊட்டச்சத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்று கூறப்பட்டது.

- 120 கிராம் சமைத்த பருப்புவகைகள் 

- 170 கிராம் டோஃபு சோயாக்கட்டி 

கோழியைத் தவிர்த்துப் பல உணவு வகைகளிலும் புரதச்சத்தைப் பெறலாம். ஊட்டச்சத்தைச் சற்றும் இழக்காமல், மக்கள், உணவுத் தெரிவுகளை மாற்றிக்கொள்ளமுடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்