Skip to main content
பிள்ளைகளுக்கான LifeSG சிறப்புத்தொகை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிள்ளைகளுக்கான LifeSG சிறப்புத்தொகை - பயன்படுத்தவில்லை என்றால் காலவதியாகிடும்

வாசிப்புநேரம் -
பிள்ளைகளுக்கான LifeSG சிறப்புத்தொகையைச் சுமார் 83 விழுக்காட்டினர் பயன்படுத்திவிட்டனர்.

சென்ற ஆண்டு (2025) வழங்கப்பட்ட அந்த 500 வெள்ளித் தொகை வரும் ஜூலை மாதம் காலவதியாகிறது.

அதை பயன்படுத்த வழங்கப்பட்ட ஓராண்டு அவகாசம் நீட்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

போதுமான தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெ மிங் (Goh Pei Ming) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கான LifeSG சிறப்புத் தொகையை இன்னும் பயன்படுத்தி முடிக்காதோருக்கு அடுத்த மாதம் கடைசியாகத் தகவல் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

சென்ற ஆண்டு ஜூலையில் 12 வயது அல்லது அதை விடக் குறைந்த வயதுப் பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் 500 வெள்ளி வழங்கப்பட்டது.

அதை LifeSG செயலி மூலம் இணையத்தில் அல்லது நேரடியாகக் கடைகளில் பயன்படுத்தலாம்.

பிள்ளை வளர்ப்புச் செலவைச் சமாளிக்க அந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.

வரும் ஜூலை மாதம் மீண்டும் 500 வெள்ளி சிறப்புத்தொகை வழங்கப்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்