குழந்தைப் பராமரிப்பு, பாலர் வகுப்பு - ஓர் ஊழியர் எத்தனை பிள்ளைகளைப் பார்த்துகொள்ளலாம்?
படம்: ECDA
This audio is generated by an AI tool.
குழந்தைப் பராமரிப்பு, பாலர் வகுப்பு நிலையங்களில் ஓர் ஊழியர் எத்தனை பிள்ளைகளைப் பார்த்துகொள்ள வேண்டும் என்பதற்குச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) பதிலளித்துள்ளார்.
2017ஆம் ஆண்டில் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது.
அப்போது குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்ய பாலர் பள்ளிகளின் ஊழியர் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டது.
ஓர் ஊழியர் எத்தனை பிள்ளைகளைப் பார்த்துகொள்ளலாம் என்பது மறு ஆய்வு செய்யப்பட்டது.
அமைப்பு மற்ற நாடுகளின் திட்டங்களை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தித் தனது திட்டத்தை வலுப்படுத்தியது.
பாலர் பள்ளிகளின் மனிதவளம், ஊழியர்களைச் சேர்ப்பதற்கான அடிப்படை, வெவ்வேறு வயதுக் குழந்தைகளின் வளர்ச்சித் தேவை போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
பாலர் பள்ளிகள், குழந்தை-பெற்றோரின் பல்வேறு தேவைகள், கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படத் தேவையான நீக்குப்போக்கையும் கொண்டுள்ளன.
நிபுணர்களிடமிருந்தும் உதவியைப் பெறலாம்.
வளர்ச்சித் தேவைகள் கொண்ட குழந்தைகளைச் சேர்க்க விரும்பினால் அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.
இது அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆதரவளிக்க போதுமான வளங்கள் இருப்பதை உறுதிசெய்யும்.