Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவமனையில் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளில் பெரும்பாலோர் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள்

வாசிப்புநேரம் -

மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளில் பெரும்பாலோர் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளாய்ப் பதிவாகிவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் (Kenneth Mak) அதனைத் தெரிவித்தார்.

"கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெறும் 16 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை விட கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம்," என்று அவர் சொன்னார்.

அதன்படி, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளில் பெரும்பாலானவர்கள், பிள்ளைகளாக உருவாகலாம் என்று திரு. மாக் தெரிவித்தார்.

"ஓமக்ரான், நுரையீரல் அமைந்துள்ள உடலின் பகுதியைத் தாக்காமல், அதற்கு மேற்பகுதியை அதிகம் தாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பிள்ளைகளிடையே அந்தப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு" என்றார் அவர். 

எனவே, ஓமக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட அதிகமான பிள்ளைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.

COVID-19 சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான வார்டுகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கிருமித்தொற்றுடன் தொடர்பில்லாத சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் கொண்ட பிள்ளைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகத் திரு. மாக் கூறினார்.

சுகாதார அமைச்சு, பிள்ளைகளிடையே ஏற்படும் COVID-19 பாதிப்பை அணுக்கமாகக் கண்காணிக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்