Skip to main content
சைனாடவுனில் 6 வயதுச் சிறுமி மாண்ட கார் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சைனாடவுனில் 6 வயதுச் சிறுமி மாண்ட கார் விபத்து - ஓட்டுநர்மீது நாளை குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
சைனாடவுனில் 6 வயதுச் சிறுமி மாண்ட கார் விபத்து - ஓட்டுநர்மீது நாளை குற்றச்சாட்டு

(படம்: CNA/Wallace Woon)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சைனாடவுனில் 6 வயதுச் சிறுமி மாண்ட கார் விபத்தில் சம்பந்தப்பட்ட 38 வயதுப் பெண் ஓட்டுநர்மீது நாளை (8 ஏப்ரல்) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.

கவனமில்லாமல் காரைச் செலுத்தி மரணம் விளைவித்தது, கடுமையாகக் காயம் ஏற்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்படும்.

இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி கார் நிறுத்துமிடத்தில் விபத்து நடந்தது.

அதில் 6 வயது ஷேய்னா லஷிரா ஸ்மாராடியானி (Sheyna Lashira Smaradiani) உயிரிழந்தார்.

அவரது தலையில் கடுமையாகக் காயம் ஏற்பட்டது. அவர் மாண்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த சிறுமியின் தாயார் திருவாட்டி ரைஷா அனின்றா பஸ்காசிஸ்வி (Raisha Anindra Pascasiswi) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் தற்போது இந்தோனேசியாவிற்குத் திரும்பிவிட்டார்.

காரை ஓட்டியது இந்தியாவைச் சேர்ந்த பெண் என்று CNA தெரிவித்தது.

அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி.

கவனமின்றிக் காரை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடுமையான காயம் விளைவித்த குற்றத்திற்கு 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்