சிங்கப்பூர்வாசிகளை ஈர்க்க மாற்று வழிகளை நாடும் சைனாடவுன் கடைகள்
COVID-19 நோய்ப்பரவல் சூழலுக்கு முன்னர், சுற்றுப்பயணிகளைச் சுண்டி இழுக்கும் பகுதிகளில் ஒன்றாக சைனாடவுன் வட்டாரம் திகழ்ந்தது.

படங்கள்: நித்திஷ் செந்தூர்
COVID-19 நோய்ப்பரவல் சூழலுக்கு முன்னர், சுற்றுப்பயணிகளைச் சுண்டி இழுக்கும் பகுதிகளில் ஒன்றாக சைனாடவுன் வட்டாரம் திகழ்ந்தது.
சிங்கப்பூர் நினைவுப் பொருள்கள், வாசனைத் திரவியம், ஆடம்பர ஆடைக்கான தையல் கடைகள் ஆகியவற்றை நாடி சுற்றுப்பயணிகள் செல்வது வாடிக்கையாக இருந்தது.

தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
சுற்றுப்பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதால் சைனாடவுன் வட்டாரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பல கடைகள் மூடப்பட்டு அவ்விடங்கள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.
சிங்கப்பூர்வாசிகளை ஈர்க்க கடைகள் மாற்று வழிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.
வியாபாரத்தைத் தக்க வைத்துகொள்ள கடைகள் என்னென்ன மாற்று வழிகளை நாடியுள்ளன என்பதை 'செய்தி' கண்டறிந்து வந்தது.
சுற்றுப்பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளதால் வாசனைத் திரவியங்களின் வியாபாரம் 90 விழுக்காடு சரிந்துள்ளது.

ஏமாற்றத்துடன் அவர் திரும்பும்போது, மீண்டும் கடைக்கு வந்து அந்த வாசனைத் திரவியத்தை வாங்கும் ஆர்வம் குன்றலாம்.

- வேங்கா, Philms Cosmetic கடையின் உரிமையாளர்
உள்ளூர்ப் பயணத்துறைக்குப் புத்துயிரூட்ட, சிங்கப்பூரர்களுக்கு 320 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள மானியங்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அது சில்லறை விற்பனைக் கடையில் வியாபாரம் அதிகரிக்க உதவுமா என்று திரு. வேங்காவிடம் 'செய்தி' கேட்டது.
பொதுவாக அரசாங்கம் சிங்கப்பூரர்களுக்குப் பணம் வழங்கும் நேரங்களில், எங்களது வியாபாரம் 15 விழுக்காடு வரை அதிகரிக்கும். மானியங்கள் வழங்கப்படும்போது, சிங்கப்பூரர்கள் வெளியே வருவதை அது ஊக்குவிக்கும். வெளியே வரும்போது கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கும் போக்கும் அதிகரிக்கும். நலிந்துள்ள வியாபாரத்திற்கு அது புத்துயிர் ஊட்டும் என நம்புகிறேன்.
கடைக்காரர்கள் செலுத்தும் வாடகை, கடைகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஒருசில கடைகள் தெரிவித்தன.
கட்டுப்படியான விலையில் வாடகை இருந்தால் மட்டுமே கடைகள் நீடிப்பதை உறுதிசெய்ய முடியும் என்று அவை தெரிவித்தன.
கடந்த 4 மாதமாக நாங்கள் வாடகை செலுத்தாமல் இருந்தது பேருதவியாக இருந்தது.

- ஹேலன், Rezqi Collection கடை ஊழியர்
வியாபாரிகள் தங்களின் ஊழியர்களைத் தக்கவைத்துகொள்ள வேலை ஆதரவுத்திட்டம் மேலும் 7 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் வேலைசெய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் 30 விழுக்காடு மானியமாக வழங்கப்படும். அது குறித்துக் கடைகளிடம் கேட்டபோது...

- Orchid Chopsticks கடையின் உரிமையாளர்
கலை நிகழ்ச்சிகள், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றை சைனாடவுன் வட்டாரத்தில் ஏற்பாடு செய்தால் சிங்கப்பூர்வாசிகளை ஈர்க்கலாம் என்று 'செய்தி'இடம் பேசிய சில கடைகள் தெரிவித்தன. வியாபாரத்தை அதிகரிக்க அது வழிவகுக்கும் என்று கடைகள் கூறின.