சிங்கப்பூர் exclusive
'அதிர்ஷ்டத்தைக்' கொண்டுவரும் மாண்டரின் ஆரஞ்சு
வாசிப்புநேரம் -
மாண்டரின் ஆரஞ்சு..
உருண்டையான, மங்களகரமான தோற்றம்...
சீன மொழியில் அதன் உச்சரிப்பு 'அதிர்ஷ்டம்' போல் ஒலிக்கும்...
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாள்களில் 300- 500 கிலோகிராம் ஆரஞ்சுப் பழங்கள் விற்பனையாகலாம்...
SLH fresh fruits-இன் மொத்த விற்பனைப் பிரிவுத் தலைவர் திரு. ஆங் தகவல் தந்தார்.
மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் எங்கிருந்து வருகின்றன?
ஆண்டுதோறும் ஆரஞ்சுப் பழங்கள் கிடைக்கும்...
பெருநாள் காலத்தில் சீனப் பழங்களுக்கு ஆக அதிகமான தேவை இருக்கும்...

95% சீனாவிலிருந்து
5% தென் கொரியா, ஜப்பான் போன்ற இடங்களிலிருந்து.
சில ஆண்டுகளில் பற்றாக்குறை ஏற்படும்போது பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பழங்கள் தருவிக்கப்படும்.
பொதுவாகச் சீனப் புத்தாண்டுக்குப் பிறகு பழங்களுக்கான தேவை குறையும்.

பழத்தின் இனிப்பு எப்படி உறுதிசெய்யப்படுகிறது?
சீனாவில் மாண்டரின் ஆரஞ்சுப் பருவம் நவம்பரில் தொடங்குகிறது. பழம் 80 விழுக்காடு பழுத்த நிலையை எட்டும்போது அது பறிக்கப்படும். ஜனவரி மாதத்தில் இருந்து அது விற்பனைக்கு விடப்படும்.
மக்கள் பொதுவாகப் பெருநாளுக்கு முந்தைய சில நாள்களில்தான் பழங்களை வாங்குவார்கள். அந்தச் சமயத்தில் பழத்தின் இனிப்பு உச்சத்தை அடைந்துவிடும் என்று திரு ஆங் கூறினார்.
சில ஆண்டுகளில் புத்தாண்டு முன்கூட்டியே வருவதுண்டு. அப்போது சில பழங்கள் அவ்வளவு இனிப்பாக இருக்கமாட்டா என்று அவர் சொன்னார்.

"சூடுபிடிக்கும் 'red beauty' விற்பனை"
மாண்டரின் ஆரஞ்சில் பலவகை...
Ponkan..Lukan...Jiokan...Mikan...
ஒவ்வொரு வகையிலும் தோலின் பதம் வித்தியாசமாக இருக்கும்...சுவையும் கொஞ்சம் மாறுபட்டிருக்கும்.
அண்மை ஆண்டுகளாக 'Red Beauty' ஆரஞ்சுப் பழங்கள் கடைகளில் இருந்து பஞ்சாய்ப் பறக்கின்றன.
விதைகள் அவ்வளவாக இல்லை..இனிப்பாக இருக்கும்..சாறு நிறைந்திருக்கும்..
tangerine வகை, சாதாரண ஆரஞ்சு வகை ஆகியவற்றின் கலவை 'Red Beauty'..
இவ்வாண்டு அதன் விலை 2 மடங்காகியுள்ளது.

ஆரஞ்சுப் பழத்துக்குப் பொட்டலங்கள்...அன்பளிப்புப் பைகள்..
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்காக மட்டும் வாங்கப்படுவதில்லை...
அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வாங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பழத்துக்கும் தனிப் பொட்டலம்...நிறையப் பழங்களை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் தனிப் பொட்டலம் இருக்கும்.
மொத்த விற்பனையாளர்கள் பழங்களை மட்டும் கவனிக்காமல் பொட்டலங்களையும் தயார் செய்யவேண்டும்.
அதற்கான ஏற்பாடுகள் 3 மாதங்கள் முன்பே தொடங்கலாம்.
"ஆரஞ்சுப் பழங்களை அறுவடை செய்ய 2 மாதங்கள் ஆகலாம். அதற்கு முன்பே பொட்டலத்தின் வடிவமைப்பை முடிவு செய்யவேண்டும்.. பொட்டலங்களை அச்சிடவேண்டும்..." என்று திரு ஆங் கூறினார்.
அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் நம்பிக்கையில் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடும் பழக்கம் தொடங்கியது. இப்போது சீனப் புத்தாண்டின் இன்றியமையாத அங்கமாக அது மாறியுள்ளது.