Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனப் புத்தாண்டின்போது COVID-19 கட்டுப்பாடுகள் தொடரும்

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டின்போது COVID-19 கட்டுப்பாடுகள் தொடரும்

(படம்: AFP/Roslan Rahman)

சீனப் புத்தாண்டின்போது சமூகப் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக ஒன்றுகூடல்களில் அனுமதிப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாக இருக்கும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்தது.

அதே வேளையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் ஐவர் மட்டுமே வீடுகளுக்குச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றுகூடல்களில் கலந்துகொள்ளும் முன்னர் தனிநபர்கள் ART பரிசோதனை மேற்கொள்ள அறிவுறத்தப்பட்டது.

உணவகங்களுக்கான  விதிமுறைகளும் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

உணவகங்களில் ஒரே நேரத்தில் பல மேசைகளை முன்பதிவு செய்வது அனுமதிக்கபடமாட்டா.

சமய ஊர்வலங்கள், இரவுநேர விருந்துகள் போன்ற பெரிய அளவிலான சமய நிகழ்ச்சிகளை நடத்தவும் தொடர்ந்து அனுமதி இல்லை என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa