Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கே ஊர்வலத்தில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு இஸ்தானாவில் பாராட்டு

வாசிப்புநேரம் -

அதிபர் ஹலிமா யாக்கோப் (Haleema Yacob) அண்மையில் நடந்துமுடிந்த சிங்கே (Chingay) ஊர்வலத்தில் பங்குபெற்ற கலைஞர்கள் சிலருக்கு இஸ்தானாவில் இன்று (8 பிப்ரவரி) விருந்தளித்துப் பாராட்டியுள்ளார்.

ஈராண்டு இடைவெளிக்குப் பின் முழுவீச்சில் நடைபெற்றது சிங்கே ஊர்வலம்.

பல்லின, பல கலாசாரத்தின் சங்கமமாகத் திகழும் இந்த ஊர்வலத்துக்குச் சுமார் 20,000 பேர் இவ்வாண்டு நேரில் சென்றனர்.

சீனர், மலாய் இனத்தவர், இந்தியர், யுரேஷியர்கள் ஆகியோரின் கலைப்படைப்புகள் பல்வேறு கலாசாரங்களின் அழகையும் ஒற்றுமையின் வலிமையையும் எடுத்துக்காட்டியதாக அதிபர் ஹலிமா மெச்சினார்.

சிங்கே ஊர்வலத்தில் கலந்துகொண்டதில் பங்கேற்பாளர்களுக்கு ஆனந்தம்.

"3 மாதப் பயிற்சிக்குப் பிறகு நிகழ்ச்சியில் பங்குபெற்றபோது மகிழ்ச்சியானத் தருணம். 
5 வயதிலிருந்து 16 வயது வரையிலான எங்கள் மாணவர்கள் அதில் பங்குபெற்றார்கள். 
அனைவரும் குழுப் பிணைப்பு இருப்பதை உணர்ந்தார்கள். 
மற்ற இனத்தவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது" 
என்றார் Sakthi Fine Arts நிறுவனத்தின் நடன இயக்குநர் தேவி வீரப்பன் (Devi Veerappan).


மழைக்காலமாக இருந்தபோதும் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் உறுதியுடனும் செயல்பட்டதைத் திருவாட்டி ஹலிமா பாராட்டினார்.

சிங்கே ஊர்வலத்தில் மாற்றுத் திறனாளர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்வாக அது இருப்பதையும் சுட்டினார்.


 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்