அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிங்கே ஊர்வலம் இடம்பெறும்

(Chingay)
சிங்கே ஊர்வலத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரசிகர்கள் மீண்டும் நேரடியாகப் பார்க்கமுடியும். கடந்த ஈராண்டுகளாக அது மெய்நிகர் வழியாக நடைபெற்றது.
இரவு நேரக் கார்ப்பந்தய வளாகத்தில் இடம்பெறவுள்ள அதனைக் காண்பதற்கு 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்படைப்புகளையும் கண்காட்சிகளையும் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.
பிப்ரவரி மூன்றாம் நான்காம் தேதிகளில் நடைபெறவிருக்கும் சிங்கே ஊர்வலத்தில், இளையர்கள்முதல் பெரியவர்கள்வரை ஒன்றாகச் சேர்ந்து, சிறிய மிதவையை உருவாக்கவிருக்கின்றனர்.
ஊர்வலத்துக்குப் பிறகு, பொதுமக்கள் அதனை அருகில் சென்று பார்க்கலாம்.
சிங்கே ஊர்வலத்தைக் காண்பதற்குரிய நுழைவுச்சீட்டுகளை நாளையிலிருந்து SISTIC-இல் பெற்றுக்கொள்ளலாம்.