சுவா சூ காங் கூட்டுரிமை வீட்டில் தீ - 150 பேர் வெளியேற்றம்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்
This audio is generated by an AI tool.
சுவா சூ காங்கில் (Chua Chu Kang) உள்ள கூட்டுரிமை வீட்டில் இன்று அதிகாலை தீ மூண்டது.
முன்னெச்சரிக்கையாகச் சுமார் 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுவா சூ காங் நார்த் 6இல் உள்ள இயூ மேய் கிரீன் (Yew Mei Green) கூட்டுரிமை வீட்டில் சம்பவம் நடந்தது.
அதிகாலை 4.50 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
கூட்டுரிமை வீட்டின் மூன்றாம் மாடியில் தீ மூண்டதாகத் தெரிகிறது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
சம்பவத்தின் போது புகையைச் சுவாசித்த இருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
தீச்சம்பவத்திற்குப் படுக்கையறையில் இருந்த மின்சாதனம் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.