Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வான்கோழி பிரியாணி!"... என்னவொரு சமையல்.... கிறிஸ்துமஸ் தினத்தன்று ...

வாசிப்புநேரம் -

எல்லாப் பண்டிகை நாள்களிலும் உணவுக்குச் சிறப்பிடம் உள்ளது...

அதற்குக் கிறிஸ்துமஸ் தினம் கொஞ்சமும் சளைத்ததல்ல... 

கிறிஸ்துமஸ் திருநாளன்று மக்கள் வீட்டில் சமைக்கும் சிறப்பு உணவு? 

கிறிஸ்துமஸ் கொண்டாடும் சிலரிடம் பேசியது செய்தி. 

🍛 "வான்கோழிக்குள் காய்கறிகளை வைத்துச் சமைக்கப்படும் பிரியாணி" - Stuffed Turkey Briyani

கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்தியர்கள், அந்நாளன்று சில இந்திய வகை உணவுகளை வீட்டில் சமைப்பது வழக்கம். 

திருமதி ஃபிலோமினாவும் அப்படித்தான்... ஆனால் அவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டில் சமைக்கும் பிரியாணியைச் சற்று வேறுபட்ட விதத்தில் தயாரிப்பார். 

Stuffed Turkey என்பது அமெரிக்காவிலும் மற்ற மேற்கத்திய நாடுகளிலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சமைக்கப்படும் பிரபல உணவுவகைகளில் ஒன்று. 

திருமதி ஃபிலோமினா வான்கோழிக்குள் கீரை வகைகள், அன்னாசி முதலியவற்றை நிரப்பி அதை oven அடுப்பில் வேகவைப்பார். 

பின்னர், பிரியாணிச் சோற்றை அதற்குமேல் வைத்துப் பரிமாறுவார். 
 
🍪 Gingerbread Man
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகம் செய்யப்படும் பலகாரம்...
அதைத் தயாரிக்கச் சுமார் 4 மணிநேரம் தேவைப்படும் என்கிறார் திருவாட்டி ஜோசஃபின். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவரும் அவரது மகளும் சேர்ந்து அந்தப் பலகாரத்தைத்  தயார் செய்வது வழக்கம் என்று சொன்னார் அவர். 

அதன் சுவை, இஞ்சியின் காரத்துடனும் பிஸ்கட்டின் இனிப்புடனும் இருக்கும். அதன் வடிவம்... மனிதனின் உருவம் போன்றிருக்கும்! 

🥧 Shepherd's Pie 

தமக்கு அதிகம் சமையல் தெரியாது என்றும் Shepherd's Pie தயாரிப்பு சற்றுச் சுலபமானது என்றும் கூறுகிறார் திரு விஸ்வாசம்.

ஆட்டிறைச்சி, உருளைக்கிழங்கு, சில காய்கறிவகைகள் போன்றவற்றைச் சேர்த்து அந்த உணவுவகையைத் தயாரிப்பதற்குச் சுமார் ஒரு மணிநேரம் தேவைப்படும் என்கிறார் அவர்.

கிறிஸ்துமஸுக்கு முன்தினம் நள்ளிரவில் தேவாலயத்துக்குச் செல்வதற்கு முன் அதைத் தயார் செய்து, பொட்டலமிட்டு தேவாலயத்துக்கு எடுத்துச்செல்வது வழக்கம் என்கிறார் திரு விஸ்வாசம். 

மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து உண்பது அவரது மனத்துக்குத் திருப்தியளிக்கும் ஒன்று என்று அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்