Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுவா சூ காங்கில் வெளியிலிருந்து வந்த பறவைகள் உள்ளூர்ப் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதிக்காமல் இருக்க என்ன செய்யப்பட்டுள்ளது?

வாசிப்புநேரம் -

சுவா சூ காங்கில் வெளியூர்களிலிருந்து வந்த பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவை உள்ளூர்ப் பறவைகளின் பல்லுயிர்ச்சூழலையும் கூடுகளையும் நீண்ட காலத்துக்குப் பாதிக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது.

அதற்குத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

Red-breasted வகைக் கிளிகள் வெளியிலிருந்து சிங்கப்பூருக்குள் வந்தவை.

அவை அதிகமாகும்போது, உள்ளூர்ப் பறவைகளுக்கான உணவு, கூடுகள் ஆகியவற்றுக்குப் போட்டி ஏற்படுகிறது.

அவ்வகைப் பறவைகளால் நச்சுயிரி நோய்களும் ஒட்டுண்ணிகளும் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதையும் அமைச்சர் சுட்டினார்.

எனவே வெளியிலிருந்து வந்த பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத் தேசியப் பூங்காக் கழகம் அறிவியல் - சமூகம் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

உதாரணத்துக்குச் சுவா சூ காங்கில் red-breasted வகைக் கிளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசியப் பூங்காக் கழகம் சுவா சூ காங் நகர மன்றத்துடன் இணைந்து மரங்களைக் கத்தரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பறவைகளைப் பொறி வைத்து அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

வெளியிலிருந்து வரும் பறவைகளால் பல்லுயிர்ச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கப்படுகிறது.

பூங்காக்கள், மரங்கள் சட்டத்தின்கீழ், தேசியப் பூங்காவுக்குள் சட்டவிரோதமாக விலங்குகளைக் கொண்டுபோய்விடும் குற்றத்துக்குக் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்