சிங்கப்பூர் exclusive
சூலியா கம்பம்: மறந்துபோன ஒரு தமிழ் தடம்
வாசிப்புநேரம் -
1820களில் உருவான சூலியா ஸ்டிரீட் (Chulia Street) ‘Kling Street’ என்று அழைக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் ‘கலிங்க’ மக்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அப்படித்தான் அந்தச் சாலைக்கு கிளிங் ஸ்டிரீஃப் (Kling Street) என்ற பெயர் வந்தது.
ஒரு காலகட்டத்தில் இந்தியக் கைதிகள் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
அதனால் காலப்போக்கில் கிளிங் என்ற சொல் அவமதிக்கும் சொல்லாக பார்க்கப்பட்டது.
1921-இல் சாலையின் பெயர் சூலியா ஸ்டிரீட் என மாற்றப்பட்டது.
கலிங்கா வம்சத்தின் வடஇந்தியப் பெயர்தான் சூலியா.
இந்தப் பகுதியில் இந்திய தொழிலாளர்கள், கடைக்காரர்கள், கடன் கொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இருந்தனர்.
1950களில் இங்கு இந்திய முஸ்லிம் கடைகள் நிறைந்திருந்தன.
அவை பெரும்பாலும் மசாலா, துணி, உலோகம், Stationery வியாபாரங்களாக இருந்தன.
1982, 1983களில் அந்தக் கடைவீடுகள் இடிக்கப்பட்டன.
1970 வரைக்கும் நூற்றாண்டுக்கு மேல் தியோசூ (Teochew) வியாபாரிகள் அங்கு பிரபலமாக இருந்தார்கள்.
உலர்ந்த இறால், கருவாடு, சுறா வால்
ஆகியவற்றின் ஏற்றுமதி இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தச் சாலை பல சமூகங்களின் வரலாற்றை தாங்கி நிற்கும் ஒன்றாக திகழ்கிறது.
1974-இல் UOB Building...
1976-இல் OCBC Centre...
இந்தக் கட்டடங்கள் அங்கு வந்தவுடன் இடமே உருமாறியது.
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் ஆரம்ப அத்தியாயங்களில் ஒன்றாக அமைகிறது சூலியா ஸ்டிரீட்.

ஆதாரம் : Mediacorp Seithi